முகப்பு
நாகப்பட்டினம்

பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை: பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம்

சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைமடைப் பகுதி பாசன வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 23 ஜூலை 2018, 5:48 am IST
பகிர்:

சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைமடைப் பகுதி பாசன வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் பகுதி கடைமடைப் பாசனப் பகுதியில், தெற்கு ராஜன் வாய்க்கால்,புதுமண்ணியாறு மற்றும் பொரை வாய்க்கால் ஆகிய பிரதான வாய்க்கால்களும், 500-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வாய்க்கால்களும் வெட்டப்படாததால், புதர் மண்டியும், மண்ணால் தூர்ந்தும் காணப்படுகின்றன. இதன் காரணமாக வாய்க்கால்களில் தண்ணீர் வந்தாலும், பாசனத்துக்கு எளிதில் சென்றுசேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு பாசன வசதிக்காக காத்திருக்கிறது. இதனிடையே, வாய்க்கால்களைத் தூர்வாருமாறு விவசாயிகள் தரப்பில் பொதுப்பணித்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, மேட்டுர் அணையிலிருந்து தண்ணிர் திறந்து விடப்படுள்ள சூழலில், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு சென்றுசேருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மாதிரவேளூர் காமராஜ் கூறுகையில்,  கடைமடைப்பகுதியான கொள்ளிடம்  பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூர்வார வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments