முகப்பு
நாகப்பட்டினம்

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில்

Updated On : 23 ஜூலை 2018, 5:46 am IST
பகிர்:

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
கர்நாடக மாநிலத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) இரவு 8.30 மணி முதல் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு அளவு, திங்கள்கிழமை பகலுக்குள் விநாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments