முகப்பு
நாகப்பட்டினம்

சௌரிராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா

திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரத்தில்அமைந்துள்ள அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் கோயிலில்

Updated On : 13 பிப்ரவரி 2019, 6:53 am IST
பகிர்:

திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரத்தில்அமைந்துள்ள அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் கோயிலில் மாசி மகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 நாள்கள் நடைபெரும் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சௌரிராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 17-ஆம் தேதி தேரோட்டமும், பிப்ரவரி 19-ஆம் தேதி திருப்பட்டினத்தில் சமுத்திர தீர்த்தவாரியும், பிப்ரவரி 24-ஆம் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கா. பரமானந்தம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.