முகப்பு
நாகப்பட்டினம்

போலீஸாரிடம் தகராறு: இளைஞர் கைது

சீர்காழியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:17 am IST
பகிர்:

சீர்காழியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சீர்காழியை அடுத்த கோயில்பத்து தாடாளன் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் பிரபாகரன் (22). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் சீர்காழி புறவழிச்சாலை கோயில்பத்து நான்குவழிச் சந்திப்பில் நின்று கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம். மேலும், அவ்வழியாக வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகன போலீஸாரிடமும் பிரபாகரன் தகராறு செய்து, போலீஸாரை பணிசெய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தினாராம். தகவலறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார், அங்கு வந்து பிரபாகரனை கைது அழைத்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.