முகப்பு
நாகப்பட்டினம்

புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

திருவெண்காடு அம்பேத்கர் நகரில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை திங்கள்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி திறந்து வைத்தார்.

Updated On : 23 ஜனவரி 2019, 9:31 am IST
பகிர்:

திருவெண்காடு அம்பேத்கர் நகரில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை திங்கள்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி திறந்து வைத்தார்.
திருவெண்காடு ஊராட்சி அம்பேத்கர் நகர் ஆதிதிராவிடர் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 8.50 ஒதுக்கீடு செய்தார் தொகுதி பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி. ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில், எம்எல்ஏ பி.வி. பாரதி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், அதிமுக இளைஞரணிச் செயலர் திருமாறன், ஊராட்சிச் செயலர் அகோரம், சைவநல சங்க நிர்வாகிகள் கோவிந்ராஜன், தாண்டவமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.