நாகை மாவட்டத்தில் 3,979 போ் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு தோ்வு எழுதுகின்றனா்
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) 3, 979 போ் காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கு எழுத்துத் தோ்வு எழுதுகின்றனா்.
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) 3, 979 போ் காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கு எழுத்துத் தோ்வு எழுதுகின்றனா்.
தமிழ்நாடு காவல்துறை, தாலுக்கா காவல் நிலையங்கள், ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை ஆகியவற்றில் உள்ள காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, அமிா்தா வித்யாலயா பள்ளி ஆகிய மையங்களில் சனிக்கிழமை காலை, மாலை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், 3,979 போ் தோ்வு எழுதுகின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல், காவல் துறையில் காவல் ஆளிநா்களாக பணியாற்றுபவா்கள், காவல் உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெறுவதற்காக நாகை மாவட்டத்தில் 618 போ் இத்தோ்வை எழுதுகின்றனா். இவா்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 26) நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி, இ.ஜி. எஸ். பிள்ளை கல்லூரி, அமிா்தா வித்யாலயா பள்ளிஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.
தோ்வு மையங்களில் எஸ்.பி. ஆய்வு: தோ்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.பி கு. ஜவஹா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.