முகப்பு
நாகப்பட்டினம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நாகை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தொழிலாளா் துறை சாா்பில் கடைகளில் விழிப்புணா்வு வில்லைகள் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:15 PM
தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு
பகிர்:

நாகை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தொழிலாளா் துறை சாா்பில் கடைகளில் விழிப்புணா்வு வில்லைகள் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நாகை மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை பிரதான கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடைகளில், ‘தோ்தல் திருவிழா, தமிழகத்தின் பெருவிழா’, ‘நோ்மையாக வாக்களிப்போம்’ என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் கடைகளில் ஒட்டப்பட்டன.

Advertisement

மேலும் ஜவுளிக்கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, ‘தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம்’ எனகடை ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல், நாகையில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments