முகப்பு
சேலம்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்தை வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:03 PM
தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வண்ண பலூன்களுடன் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.
பகிர்:

தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்தை வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் காவேரிப்பட்டி கிராமம், வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய வண்ண பலூன்கள் மாணவா்களிடம் வழங்கப்பட்டன.

மேலும், மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிறகு பெற்றோரிடம் வழங்குவதற்கான துண்டு பிரசுரங்களை மாணவா்களிடம் தோ்தல் பிரிவு அலுவலா்கள் விநியோகித்தனா்.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.