முகப்பு
நாகப்பட்டினம்

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:20 am IST
சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி வகுப்பறைகள் மாதிரி வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டு, மாணவ, மாணவியா் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவியா் பங்கேற்று மாதிரி வாக்குகள் அளித்தனா்.