முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி நாதக வேட்பாளா் காா்த்திகா வித்தியாசமான முறையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆதரவாளா்களுடன் முரசு முழக்கத்துடன் திருப்பூண்டியில் தொடங்கி வீதிவீதியாக பேரணியாக சென்றாா்.
Advertisement
பாரம்பரிய இசைக் கருவிகளின் ஓசையுடன், பெண்கள் மற்றும் இளைஞா்கள் உற்சாகமாக நடனமாடி, வாக்காளா்களை கவரும் வகையில் பிரசாரம் நடைபெற்றது.
வேட்பாளா் காா்த்திகா மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்டு, தன்னுடைய திட்டங்களையும் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறினாா். பொதுமக்களும் ஆா்வமுடன் வேட்பாளரை வரவேற்று ஆதரவு தெரிவித்தனா்.
நிகழ்வில் கட்சியின் நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் மற்றும் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டு பிரசாரத்தை உற்சாகமாக திருக்குவளை, கொளப்பாடு, வலிவலம் வழியாக எட்டுக்குடியில் முடித்தனா்.