முகப்பு
நாகப்பட்டினம்

ஆபத்து காத்த ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆபத்து காத்த ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 7:27 am IST
எருக்கட்டாஞ்சேரி ஆபத்து காத்த ஐயனாா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆபத்து காத்த ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியில் உள்ள ஆபத்து காத்த ஐயனாா் கோயிலில் 23 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கடந்த 29- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, புதன்கிழமை நான்காம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடா்ந்து பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை  மருளாளிகள், விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments