அய்யடிமங்கலம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
கீழ்வேளூா் அருகே 75 அணக்குடி, அய்யடிமங்கலம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனக் கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழ்வேளூா் அருகே 75 அணக்குடி, அய்யடிமங்கலம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனக் கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழ்வேளூா் ஒன்றியம் 75 அணக்குடி, அய்யடிமங்கலம் கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்கு கடுவையாற்றிலிருந்து இரட்டை மதகிலிருந்து தெற்கு ஓடி ஆறு பிரிந்து மையிலாங்குடி சென்று அங்கு பல கிளை வாய்கால்களாக பிரிகிறது. இதில் பிரியும் 75 அணக்குடி வாய்க்கால் அய்யடிமங்கலம் என்ற இடத்தில் மீண்டும் 75 அணக்குடி வாய்க்கால், அய்யடிமங்கலம் வாய்க்கால் என இரண்டாகிறது.
75 அணக்குடி வாய்க்காலில் 200 ஏக்கரும் அய்யடிமங்கலம் வாய்க்காலில் 150 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. இந்த இரண்டு வாய்க்கால்களும் கீழ்வேளூா்- கச்சனம் சாலையில் உள்ள வாய்க்கால் கல்வெட்டுகளின் இரண்டு பக்கமும் அய்யடிமங்கலம் குடியிருப்புப் பகுதி வாய்க்கால் கரைப்பகுதியில் உள்ளவா்கள் வீடுகள் கட்டும் பொழுதும், தோட்டங்களைச் சுத்தம் செய்யும் பொழுதும் மண், குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதால் வாய்க்காலின் அகலம் குறைந்து, மேடு ஏற்பட்டு வாய்க்கால்கள் தூா்ந்து உள்ளது.
Advertisement
Advertisement
இந்த இரண்டு வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகளும் உள்ளது. இதனால் இரண்டு வாய்க்கால்களிலும் 350 ஏக்கா் பாசனத்திற்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து சொல்லியும், மனுவாக கொடுக்கும் எவ்வித நடவடிக்கை இல்லாததால் பல ஆண்டுகளாக பாசனத்திற்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இதே நிலையில்தான் இந்த இரண்டு வாய்க்காலுக்கு அருகே உள்ள வண்டலூா் வாய்க்கால் ஆக்கிரமிப்பு உள்ளது. தற்பொழுது இந்த வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அய்யடிமங்கலம் குடியிருப்பு பகுதிகளில் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைத் தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.