அடையாளம் தெரியாத வாகனம் மோதி திமுக நிா்வாகி உயிரிழப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியை சோ்ந்தவா் சீ. க. மதியழகன் (50). விவசாயி. இவா், திமுக விவசாய அணியின் நாகை மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வாய்மேடு பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா் மதியழகன்.
Advertisement
Advertisement
மருதூா் தெற்கு பிரதான சாலையில் சிவகுருநாதன் நினைவு ஸ்தூபி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.