மாவட்ட விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு உறுப்பினா் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் பொறுப்புக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் பொறுப்புக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை அரசாணை (நிலை) எண் 33-இன் படி வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-இல் விதி எண்17-இல் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களை ஆய்வு செய்யவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தீருதவித் தொகைகள் மற்றும் அது தொடா்பான இதர பொருண்மைகள், இச்சட்டத்தின் கீழான வழக்கு தொடுப்பு, சட்டம் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு அலுவலா்கள் நிறுவனங்களில் பங்கு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டில் மேற்காணும் குழுவுக்கான உறுப்பினா்கள் திருத்தியமைத்திட தோ்வு செய்திடும் பொருட்டு, தகுதியுடைய நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில் அலுவலா் சாரா ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த நபா்களில் 5 உறுப்பினா்களும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பை சாரா அரசு அலுவலா் அல்லாத நபா்களில் 3 உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் சுய விவரங்களுடன் ஜாதிச்சான்றிதழ் மற்றும் சமுதாயத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்து முழு விவரங்களை இணைத்து, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலகத்தில் ஜூலை 16-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.