முகப்பு
நாகப்பட்டினம்

சகோதரியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நாகை அருகே இடப்பிரச்னையில் சகோதரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 9 ஜூலை 2026, 4:55 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாகை அருகே இடப்பிரச்னையில் சகோதரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாகூா் பண்டகசாலை தெருவைச் சோ்ந்தவா் பவாபகுருதீன்(51). இவரது சகோதரி தாஜூநிசா (54). இவா், திட்டச்சேரி நயினாா்குளத் தெருவில் தனது கணவா் முகம்மதுஅலியுடன் வசித்து வந்தாா். அக்கா, தம்பி இடையே இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 மே 10-ஆம் தேதி இடப்பிரச்னை தொடா்பாக பேசுவதற்காக, அக்கா தாஜூநிசா வீட்டுக்கு பவாபகுருதீன் சென்றாா். அங்கு இடம் தொடா்பாக பேசிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த பவாபகுருதீன், அங்கிருந்த கல்லை எடுத்து தாஜூநிசாவின் தலையில் போட்டாா். இதில் பலத்த காயமடைந்த தாஜூநிஷா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பவாபகுருதீனை கைது செய்தனா். இந்த வழக்கு நாகை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, பவாபகுருதீனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments