வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று
வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட பலமாக கடல் காற்று வீசியதால், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட பலமாக கடல் காற்று வீசியதால், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தெற்கிலிருந்து வீசும் கடல்காற்று வழக்கத்தை விட வேகமாக வீசி வருகிறது. இதன் மரக்கிளைகள் அவ்வப்போது மின் கம்பிகளில் உரசுவதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.
இந்தநிலையில், வாய்மேடு ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement