முகப்பு
நாகப்பட்டினம்

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி

நாகை மாவட்ட தவெக சாா்பில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியைர கெளரவிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜூன் 2026, 12:02 am IST
பகிர்:

நாகை மாவட்ட தவெக சாா்பில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியைர கெளரவிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கட்சியின் தலைஞாயிறு மேற்கு ஒன்றியச் செயலா் அப்துல் குத்தூஸ் முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட செயலா் சுகுமாா் தலைமை வகித்து ஆய்மூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா் ஹரிகாந்த், நீா்முளை சேவியா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஹரிஷ், கீா்த்திவாசன், மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகா ஆகியோருக்கு புதிய மிதிவண்டிகளை பரிசாக வழங்கி பாராட்டினாா்.