மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாள்
குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட தமாகா தலைவர் குடவாசல் தினகரன் பங்கேற்று, சுவாமி தயானந்த சரஸ்வதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று கல்லூரியில் பிறந்த நாள் விழா: மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (ஆக. 17) பிற்பகல் 2 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கல்லூரி மேனேஜிங் டிரஸ்டி ஷீலா பாலாஜி, டிரஸ்டி மற்றும் தாளாளர் எம்.ஜி. சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இதில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.