முகப்பு
திருவாரூர்

மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது

திருவாரூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:44 am IST
பகிர்:

திருவாரூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகேயுள்ள அய்யம்பேட்டை, பெரிய தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ராஜலெட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் தினமும் மது குடித்துவிட்டு வந்து,  ராஜலெட்சுமியிடம் தகராறு செய்துவந்தாராம். இதனால், விரக்தியடைந்த ராஜலெட்சுமி தனது தந்தை வீட்டில் தங்கி, பேரளத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை மது போதையில் வந்த வெங்கடேசன், ராஜலெட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து, பேரளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.