FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆத்தி ராசாத்தி... கருப்பு படத்தின் பாடல் விடியோ!

கருப்பு படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல் விடியோ குறித்து...

கருப்பு படத்தின் பாடல் காட்சி. - படம்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
பகிர்:

கருப்பு படத்தில் இருந்து ஆத்தி ராசாத்தி எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. பா. விஜய் எழுதிய இந்தப் பாடல் திரையரங்கில் மிகுந்த கவனம் பெற்றது.

ஆர்.ஜே. பாலாஜி எழுதி, இயக்கி நடித்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, இந்திரன், நட்டி, ஸ்வாசிகா, ஷிவாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

விரைவிலேயே, ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வெளியாகவுள்ளது. இதுவரை கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கருப்பு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து, வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், படத்தில் இருந்து முக்கியமான பாடல் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

summary

Aathi Raasathi - Video Song of Suriya's Karuppu film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments