ஓடிடி வெளியீட்டில் விமர்சிக்கப்படும் கருப்பு!
கருப்பு ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன் ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் 5-வது வாரமாக திரையரங்குகளில் கணிசமான கூட்டமும் இருக்கிறது.
Advertisement
Advertisement
தற்போது, அமேசான் பிரைம் ஓடிடியில் கருப்பு வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் அதிகம் கொண்டாடப்பட்ட இப்படம் ஓடிடியில் வெளியான பின் கிராபிக்ஸ் மற்றும் கதை ரீதியாக அதிக கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. திரையரங்குகளில் சரியாக இருந்த காட்சிகளை ஓடிடியில் சரிசெய்யாமல் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சில காட்சிகளின் ஃப்ரேம்களை பதிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actor Suriya's film Karuppu has faced criticism following its OTT release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.