லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது பற்றி...
லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளது.
பவிஸ்ஹ் நாராயண் நாயகனாகவும், தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா நாயகியாகவும் நடித்துள்ள படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கே. எஸ். ரவிக்குமார், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் 'ப்ரோக் பாய்' என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ’சக்குற நிக்குற’ பாடல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The film crew announced today (June 29) that the second song from the movie Love O Love will be released on June 1.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.