FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 26 ஜூலை 2026, 1:45 pm IST
லவ் ஓ லவ் போஸ்டர் - படம் - எக்ஸ்
பகிர்:

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். தனுஷின் அக்கா மகனான பவிஷ், தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இவர் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக நாகா துர்கா நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும் இந்தப் படத்தில், கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களின் காதல் உறவுகளில் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளை மையப்படுத்தியும், கிரெடிட் கார்டால் ஏற்படும் விளைவுகளை பிரதானப்படுத்தியும் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லவ் ஓ லவ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date for the movie Love O Love has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments