சென்னை லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சென்னை லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
சென்னை லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சென்னை லவ் ஸ்டோரி. இதில், நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்துள்ளனர்.
தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியான இந்தப்படம், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றியும் பெற்றது.
Advertisement
Advertisement
திருமணத்தின்போது வருங்கால கணவனால் கைவிடப்படும் நாயகியின் வாழ்க்கையில் இருந்து தொடங்கப்படும் இந்தப்படம், எதிர்காலத்தில் மலரும் புதிய காதலை எவ்வாறு அவர் எதிர்கொள்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.
சென்னையின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். படத்திற்கான வசனங்களை சாய் ராஜேஷ் எழுதியுள்ளார்.
இந்தப் படம், உலகளவில் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை லவ் ஸ்டோரி படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆக. 21 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the movie Chennai Love Story has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.