FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹாய் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஹாய் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

24 செப்டம்பர் 2026, 2:48 pm IST
கவின் - நயன்தாரா நடித்துள்ள ஹாய் பட டிரைலர் அறிவிப்பு. - படம் - எக்ஸ்
பகிர்:

ஹாய் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின் - நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கடந்த ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஹாய்.

நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

மறைந்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இந்த நிலையில், ஹாய் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(செப். 25) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date for the movie 'Hi' has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments