FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இருமுடி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இருமுடி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

48 வினாடிகள் முன்பு
இருமுடி படத்தில் ரவிதேஜா
பகிர்:

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்‌ஷத்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக. 21ஆம் தேதி வெளியானது. மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.

திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்தப் படம், உலகளவில் ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

Advertisement

Advertisement

வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

இந்த நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் வரும் செப். 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

summary

The OTT release date for actor Ravi Teja's film Irumudi has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments