ஓடிடியில் இருமுடி கட்டு திரைப்படம் எப்போது?
இருமுடி கட்டு படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகர் ரவி தேஜாவின் இருமுடி கட்டு படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்ஷத்திரா முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
Advertisement
Advertisement
வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் வரும் செப். 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Information regarding the OTT release of actor Ravi Teja film Irumudi Kattu has come to light.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.