ஓடிடியில் விஜய் சேதுபதியின் பத்தா எப்போது, எதில் பார்க்கலாம்?
விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியின் வெளியான திரைப்படம் ’பத்தா’. இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில், நடிகை லிஜோ மோல் ஜோஸ், இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் தனது அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
வடசென்னையின் பயங்கரமான ரெளடியான பத்தா(விஜய் சேதுபதி) தற்செயலாக பள்ளியின் குளியலறையில் சிறுவனால் சிக்குக் கொள்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ரெளடியின் மனமாற்றமுமே இந்தத் திரைப்படத்தின் கதை.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள பத்தா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்தப் படம் ரூ. 20 கோடி வரை வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் அக். 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Information regarding the OTT release of Vijay Sethupathi's film Patha has been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.