ஹைக்கூ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஹைக்கூ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
ஹைக்கூ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஏகன் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூட்டணியில் உருவான திரைப்படம் ஹைக்கூ.
Advertisement
Advertisement
காதலியால் கைவிடப்பட்ட நாயகனுக்கும், காதலனால் மன சித்திரவதைக்கு உள்ளான கதாநாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆனது என்பதே ஹைக்கூ திரைப்படத்தின் கதை.
மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சபரீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்த அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்துக்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஹைக்கூ திரைப்படம் நவ. 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.