ரூ. 400 கோடி வசூல் செய்த ஹனுமன் அன்ஸ்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஹனுமன் அன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.
ஹனுமன் அன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஷோபிநவ் சத்யா பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் விஹான் ஷெட்ஜே, சந்தன் கே ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, குல்ஷன் பாண்டே மற்றும் பகவதாஸ் படேல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இந்தப் படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்தத் திரைப்படம் இயக்குநர் விஷால் சதுர்வேதி எழுதிய 'Divine Detour: That Changed My Life' என்ற ஆன்மீக புத்தகத்தின் தழுவலாக எடுக்கப்பட்டது.
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஹனுமன் அன்ஸ் திரைப்படம், நவ. 27 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.