FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரணபலி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

42 வினாடிகள் முன்பு
ரணபலி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ரணபலி திரைப்படம் கடந்த அக். 16 ஆம் தேதி வெளியானது. நாயகியாக ரஷ்மிகா நடித்திருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.

1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ரணபலி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவ. 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date for Vijay Deverakonda's film 'Ranabali' has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.