தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

இருமுடி பார்த்து ஆண்களும் கண்ணீர் விடுகின்றனர்: ரவி தேஜா

இருமுடி கட்டு வெற்றி குறித்து ரவி தேஜா...

ரவி தேஜா

Published On :

இருமுடி கட்டு திரைப்படம் ஆண்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரவி தேஜா கூறியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு திரைப்படத்தில் நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். தன் மகளைப் போன்றே பிற குழந்தைகளையும் நினைக்கும் நாயகன் பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதாக திரைப்படத்தின் கதை உருவாகியிருந்தது.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் இதுவரை ரூ. 50 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இதன் வெற்றி நிகழ்வில் பேசிய நடிகர் ரவி தேஜா, “இருமுடி கட்டு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பார்த்து நிறைய ஆண்களும் அழுகின்றனர். பலருக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Ravi Teja has stated that the movie Irumudi Kattu has made a significant impact on men as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.