மார்கழி திருவாதிரை: நடராஜர் வீதியுலா
கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜர் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜர் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
மரக்கடை கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில், பரம்பரை தர்மகர்த்தா சுப்ரமணியன் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டின் படி, கல்யாணசுந்தரேசுவரருக்கும், மங்களாம்பிகைக்கும் அரிசி மாவு, சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து வகை திரவியங்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடராஜர் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வரும் காட்சி நடைபெற்றது. மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த வீதியுலாவில் திரளான பக்தர்கள் நடராஜரை வழிபட்டனர்.
இதேபோல், பண்டுதக்குடி வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரர், வேளுக்குடி ருத்ரகோடீசுவரர், கம்பர் தெருவில் அருள்பாலிக்கும் திருநீலகண்டேசுவரர், காக்கையடி கைலாசநாதர், சாத்தனூர் காளகஸ்தீசுவரர், திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆகிய சிவன் திருக் கோயில்களில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.