குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வார்டை சேர்ந்த தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வார்டை சேர்ந்த தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், போலீஸ் காலனி, பாலு செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக ராஜராஜச் சோழன், பொருளாளராக பத்மநாபன், கௌரவ ஆலோசகராக முத்துரெங்கன், செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடியிருப்புக்கு இரவுநேர பாதுகாவலரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.