முகப்பு
திருவாரூர்

முன்விரோதத்தில் தகராறு: இருவர் கைது

மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 1:32 am IST
பகிர்:

மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வடுவூரை அடுத்த அமரபாகம் நடுத்தெருவைச் சேர்ந்த த. வீராச்சாமிக்கும் (37), ரா. விக்னேஷுக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், வீராச்சாமியை விக்னேஷ், வெ. ஆசைத்தம்பி (45) ஆகியோர் தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.