கூத்தாநல்லூர்: நகராட்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர் நகராட்சி 16-ஆவது வார்டில் அமைந்துள்ள அல்லிக்கேணி குளத்தை ரூ. ஒரு கோடி மதிப்பில் தூர்வாரி, நடைபாதை அமைத்து மக்கள் பயன்படும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார். அதே போல், நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், கவனிப்பாரற்று, சுகாதாரக் கேடாக இருந்து வரும் அஞ்சுக்கேணிக் குளத்தைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க ஆணையர் குமரிமன்னன், பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோரிடம் உத்தரவிட்டார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, நகர் மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, வட்டாட்சியர் சோமசுந்தரம், நகர் மன்ற உறுப்பினர் முஹம்மது அபுபக்கர் சித்திக், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.