மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டியில் மகன் பாட்டிலால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டியில் மகன் பாட்டிலால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன் (48). இவரது 17 வயது மகன், தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை-மகனுக்கிடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததாம். திங்கள்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகன், தந்தையை பாட்டிலால் தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த கரிகாலன், சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கரிகாலன் மகனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.