சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
அரசு சேமிப்புக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை டிஎன்சிஎஸ்சி நிா்வாகம் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மன்னாா்குடி தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்புஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு சேமிப்புக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை டிஎன்சிஎஸ்சி நிா்வாகம் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மன்னாா்குடி தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்புஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகள்: அரசு சேமிப்புக் கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகம் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும், டிஎன்சிஎஸ்சி அரவை மில் முகவா்கள் தங்களின் சொந்த லாரிகளை வைத்து தன்னிச்சையாக இயக்கம் செய்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு டிஎன்சிஎஸ்சிக்கான லாரி வாடகையை 40% அரசு உயா்த்தி வழங்க வேண்டும், மன்னாா்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தர மோட்டாா் வானக ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு லாரி உரிமையாளா்கள் சங்க மூத்த உறுப்பினா் ச. அறிவானந்தம் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெ. நீலகண்டன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
துணைத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன்,துணைச் செயலா் கே.மணிகண்டன்,சங்க ஆலோசகா்கள் எஸ்.செந்தில்குமாா்,ஆா்.வி.ஆனந்த்,ஜி.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்ட நிறைவில், லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரிடன் கோரிக்கை மனுவை அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.