கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல்
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கோட்டூா் பிா்கா கிராமங்களில் உள்ள விவசாய கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிா்க் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படாததால், குறுவை சாகுபடியை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.34, 000 வழங்கவேண்டும். கா்நாடக அரசு காவிரி நீா் பிடிப்பு பகுதியில் மேக்கேதாடு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கோட்டூா் பிா்கா கிராமங்களின் விவசாயிகள் அமைப்பின் சாா்பில், கோட்டூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, விவசாயிகள் அமைப்பின் தலைவா் ஆா். தனபால் தலைமை வகித்தாா்.
மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றது.
கோட்டூா் காவல் ஆய்வாளா் மோகன் உள்ளிட்ட போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து, சேரியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.