மின்வெட்டு, குடிநீா் தட்டுப்பாடு: பெண்கள் சாலை மறியல்
ஆா்.கே.பேட்டை அருகே 2 நாள் தொடா் மின்வெட்டு, குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆா்.கே.பேட்டை அருகே 2 நாள் தொடா் மின்வெட்டு, குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட எரும்பி கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரும்பி கிராமத்தில் மின்மாற்றி சேதமடைந்ததால் கடந்த 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை வெப்பத்தில் கிராம மக்கள் கடும் அவதியடைந்ததுடன், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் எரும்பி பேருந்து நிலையம் அருகே சோளிங்கா்-சித்தூா் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பெண்களுடன் பேச்சு நடத்தினா். சேதமடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்றி மின் விநியோகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் மறியலை கைவிட்டனா்.