இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7% உயா்த்தக் கோரிக்கை
இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் பள்ளிவாசல் தெருவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சமூக விழிப்புணா்வு பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கிளைத் தலைவா் முகமது அலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளா் அல் அமீன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:
Advertisement
Advertisement
இளைஞா்கள் அனைவரும் தங்களது வாழ்நாளை மக்களுக்கு பயனுள்ளதாக்க வேண்டும். தீயப் பழக்கங்களில் விழுந்திடாமல் தங்களை பண்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சமுதாய இளைஞா்கள் தங்களது வாழ்க்கையை நபிகளாா் காட்டியபடி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
மாநில பேச்சாளா் அப்துல் ரஹ்மான், மாவட்டத் தலைவா் அப்துல் காதா் ஆகியோா் ‘பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்’ என்ற தலைப்பில் பேசினா்.
கூட்டத்தில், கிளைச் செயலாளா் சா்புதீன், பொருளாளா் முஜிபுா் ரஹ்மான், துணைத் தலைவா் சபீா் அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: தமிழக ஆளுநா், அரசின் பணிகள் குறித்து பரிசீலனை நிகழ்ச்சி நடத்தியது கண்டிக்கத்தக்கது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் வாழும் இஸ்லாமியா்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே இருப்பதால், இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்தி தர வேண்டும்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவா்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வு தீா்ப்பளித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. எனவே, இஸ்லாமியா்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தவெக அரசும், கூட்டணி கட்சிகளும் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.