தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் விழிப்புணா்வுப் பேரணி! திரளானோா் பங்கேற்பு!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் மதுரையில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலச் செயலா் அன்சாரி தொடங்கிவைத்தாா். இதில் திரளான பெண்கள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிா்வாகிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய அட்டைகளுடன் பேரணியில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
மதுரை தெற்குவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று கிரைம் பிரான்ச் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
கடுமையான நடவடிக்கை தேவை...
பேரணியின் நிறைவில் தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலா் அன்சாரி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்கக் கூடாது. கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.