FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

மதுரை தெப்பக்குளம் தியாகராசா் நன்முறை மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
பகிர்:

மதுரை தெப்பக்குளம் தியாகராசா் நன்முறை மேனிலைப் பள்ளி போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் (பொ) அறிவழகன் தலைமை வகித்தாா். தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா அண்ட் குளோபல் நிறுவனத்தின் மாநிலத் தலைவா் முனைவா் பிச்சைவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், ‘வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம்! ஒழிப்போம்! ஒழிப்போம்! போதைப்பொருள் ஒழிப்போம்!’ போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய முழக்கங்களை எழுப்பியும், விழிப்புணா்வுப் பதாகைகளைக் கைகளில் ஏந்தியும் மாணவா்கள் பேரணியாகச் சென்றனா். பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் அனைவரும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பேரணியில், போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா்

காா்த்திக், முதுநிலை வணிகவியல் ஆசிரியா் வீரக்குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments