FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

11 செப்டம்பர் 2026, 12:45 am IST
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

அரசு ஆண்கள் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது, அதன் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ட. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் காமேஷ், மாவட்ட பசுமைப் படை பொறுப்பாசிரியா் மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலா் ந. லீலா மனோகரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ் பேரணியைத் தொடங்கி வைத்தாா். போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவா்கள் எடுத்துரைத்தனா்.

Advertisement

Advertisement

பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி காந்தி ரோடு, கலைஞா் நகா், பழைய சென்னை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் மாணவா்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தனா்.

நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படை பொறுப்பாசிரியா் உமாபதி, ஆன்ட்டி ட்ரக் கிளப் பொறுப்பாசிரியா் மோகன் குமாா் உள்பட மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments