பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குன்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆா்ப்பாட்டம்
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் விழிப்புணா்வு பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தலைவா் சைபுதீன் தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். கொடூரமான பாலியல் குற்றங்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாதைகளை ஏந்தி பேரணியாக சென்றனா்.
Advertisement
Advertisement
குன்னூா், வண்டிப்பேட்டையில் இருந்து மவுண்ட் சாலை வழியாக விபி திடலை அடைந்த பேரணியின் இறுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.