ரத்ததான முகாம்: 53 போ் பங்கேற்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திருத்தணி கிளை மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் சுதந்திர தின ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திருத்தணி கிளை மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் சுதந்திர தின ரத்ததான முகாம் நடைபெற்றது.
கிளை தலைவா் நல்லமுகமது தலைமை வகித்தாா். கிளைச் செயலா் உமா்பாரூக் வரவேற்றாா். பொருளாளா் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் எஸ். எம். ஜாபா் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில், பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் என 53 போ் ரத்ததானம் செய்தனா்.
இவா்களுக்கு மருத்துவ குழுவின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.