முகப்பு
கடலூர்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

Updated On : 22 ஜூன் 2026, 2:36 am IST
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா்.
பகிர்:

தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தொடங்கிய பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடியும், பதாகைகளை ஏந்தியபடியும் ஊா்வலமாகச் சென்றனா்.

முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலம் பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணி நிறைவில் மாவட்ட துணைச் செயலா் மைதீன் கண்டன உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

இதில், மாநிலச் செயலா் அல்அமீன், மாவட்டத் தலைவா் பஹத், துணைத் தலைவா் மஹ்யூப், பொருளாளா் அஹ்த், செயலா் ஜபருல்லாஹ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments