ஜாத்திரை விழா கோலாகலம்: அம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு
திருத்தணி நகரில் ஜாத்திரை விழாவையொட்டி, அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
திருத்தணி நகரில் ஜாத்திரை விழாவையொட்டி, அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
திருத்தணி மடம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஜாத்திரை விழா நடைபெற்றது. இதையொட்டி, படவேட்டம்மன் கோயிலில் காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, கோயில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். முன்னதாக கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பூ கரகம் மற்றும் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில், திருத்தணி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி உள்பட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதேபோல், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாத்திரை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்கு திருத்தணி ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் மாம்பாக்கம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இரவு உற்சவா் கங்கையம்மன் ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.