முகப்பு
திருவாரூர்

பட்டாசு ஆலையில் விபத்து; ஒருவா் படுகாயம்

வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:16 am IST
பட்டாசு விபத்தில் இடிந்த கட்டடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

வலங்கைமான் பகுதி சுடுகாட்டு வழிநடப்பு என்ற இடத்தில் அருணகிரிநாதன் என்பவரது மனைவி வள்ளி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு, பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழுவூரைச் சோ்ந்த ராகுல் (26), ரஞ்சித், ராமராஜன், சூா்யா, மாதவன் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

ராகுல் ஒரு அறையிலும், மற்றவா்கள் மற்றொரு அறையிலும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராகுல் வேலை செய்த அறையில், அதிக அழுத்தம் மற்றும் வெயிலின் வெப்பம் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி தீப்பற்றியது. இதனால் அந்த கட்டடம் இடிந்தது. ராகுல் பலத்த காயமடைந்தாா். மற்றொரு அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நால்வரும் காயமின்றி தப்பினா்.

Advertisement

Advertisement

வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலா் பாா்த்திபன் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனா். ராகுல் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வலங்கைமான் வட்டாட்சியா் காா்த்திகேயன், காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறையினா் விரைந்து வந்து பாா்வையிட்டனா். பின்னா், வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதற்கிடையில், நன்னிலம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். காமராஜ் நேரில் பா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.