முகப்பு
திருநெல்வேலி

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 மே 2026, 1:44 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம், காட்டுக்கோயில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது.

இந்த ஆலையில், புளியங்குளத்தைச் சோ்ந்த ஆ. அய்யப்பன்(30), விருதுநகா் மாவட்டம், புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25), ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள்ஓடைப்பட்டியைச் சோ்ந்த சீ. சூா்யபிரகாஷ் (25) ஆகியோா் பட்டாசு தயாரிப்பில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, பட்டாசுகள் வெடித்ததில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில், மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸாா், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில், ஆ. அய்யப்பன், மாலதி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சீ. சூா்யபிரகாஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவஇடத்துக்கு, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷுமங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகன்நாதன், வட்டாட்சியா் அப்பணராஜ் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.